இலங்கை பிரதான செய்திகள்

இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் – மலிக் சமரவிக்ரம


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி மாற்றங்கள் தொடர்பில் இரண்டு கட்சிகளினதும் தலைவர்களே தீர்மானங்களை எடுப்பார்கள் எனவும், யாருக்கு என்ன அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்பது குறித்து ஊகங்களை வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினமும் இது குறித்து பேசப்பட்டதாகவும் இன்றும் பேச்சுவார்த்தை நடத்தி பதவி மாற்றங்கள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.