இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை ஜனாதிபதி மாளிகை சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
கனடா பிரதமர் மோடி வரவேற்ற நிலையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பிறகு கனடா பிரதமர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்து பேசினார்.
கடந்த சனிக்கிழமை டெல்லி சென்ற கனடா பிரதமர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்ததுடன் குஜராத் சென்று காந்தி ஆசிரமத்தினையும் பார்வையிட்டிருந்தார்.
Spread the love
Add Comment