இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் 2017 இல் தரம் ஜந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் நேற்று(25) கௌரவிக்கப்பட்டுள்ளனர். 2017 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய 75 மாணவர்களில் 70 மாணவர்கள் 70 மேல் பெற்றுள்ளதோடு, அதில் 18 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(25) பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி ஜெ மாணிக்கவாசகன் தலைமையில் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் போதானா வைத்தியசாiலியன் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், கிளிநொச்சி வலய ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம், தமிழ்ப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மதுரநாயகம், ஓய்வுப்பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி சோதிநாதன் பெற்றோர்கள் என பலா் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers