இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் தேசிய நிர்மாண விருது விழா 2017

தேசிய நிர்மாண கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கான சிறந்த பங்களிப்புகளை பாராட்டும் வகையில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ‘தேசிய நிர்மாண விருது விழா 2017’ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (26) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிர்மாணத் துறையில் சிறந்து விளங்கிய 8 பேர்களுக்கான விசேட விருதுகளை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

தேசிய ஒப்பந்தக்காரர்களினால் வெளிநாட்டு கருத்திட்ட நிர்மாணப் பணிகளை ஊக்குவித்து, பாராட்டுவதற்காக இம்முறை சேர்த்துக்கொள்ளப்பட்ட 3 புதிய விருதுகளையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார். நிர்மாணத்துறை மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்கான சுற்றாடல் வழிகாட்டல் சஞ்சிகை வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக, வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எம். அபேரத்ன, நிர்மாணத்துறை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.ஆர். ஜெயசந்திரன், நிர்மாணத் துறை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கட்டிடக் கலைஞர் எச்.கே. பாலசந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.