காஞ்சி சங்கராச்சார்யர் என அழைக்கப்படும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்துள்ளார். காஞ்சி சங்கரமடத்தின் சுவாமிகளாக பல வருடங்களாக ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளை இவர் மேற்கொண்டு வந்தார்.
1954ம் வருடத்தில் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்ற அவர், 94ம் வருடத்தில் மடாதிபதியாகப் பொறுப்புகளை ஏற்று செயலாற்றி வந்தார். காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகில் அனுமதிக்கப்பட்டநிலையில்; ; சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் உயிரிழந்துள்ளார்; என அறிவிக்கப்பட்டது.
Spread the love
Add Comment