இலங்கை பிரதான செய்திகள்

சுவிஸ் குமார் தப்பி சென்றமை தொடர்பிலான விசாரணை நிறைவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் என்பவர் தப்பி செல்ல உதவியமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து , விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற புலனாய்வு துறை அதிகாரி மன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன் போது , வழக்கின் முதலாவது சந்தேகநபரான முன்னாள் வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முன்னிலையானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகள் அனைத்தையும் மேற்கொண்டு விசாரணைகள் முடிவடைந்துள்ளன. விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளோம் என குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றில் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.