இந்தியா இலக்கியம் சினிமா பிரதான செய்திகள்

30 வருடங்களுக்கு முன் ‘மய்யம்’ பத்திரிகையில் கமல்  எழுதிய கவிதை!

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று பெயரிட்டு கட்சியைத் ஆரம்பித்துள்ளார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே ‘மய்யம்’ என்று பத்திரிகை நடத்தியவர் கமல். பல பத்திரிகைகளில், சிறுகதை, தொடர்கதை, கட்டுரைத் தொடர் என்றெல்லாம் எழுதிய கமல்ஹாசன், மய்யம் பத்திரிகையில், அடிக்கடி கவிதைகள் எழுதிவந்தார்.

தன் முதல் மகள் ஸ்ருதிஹாசன் பிறந்த போது, ஓர் கவிதை எழுதி, மய்யம் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார் கமல். இந்தக் கவிதையை கமல் மறந்திருக்க வாய்ப்பில்லை. ரசிகர்கள், இதை நினைவில் வைத்திருப்பார்களா… தெரியவில்லை. ஆனால், இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, சுஜாதா உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்.

அந்தக் கவிதை இதுதான்…

ப்ரதிபிம்பம் பழங்கனவு மறந்த

என் மழலையின் மறுகுழைவு

மகளே உனக்கு என் மூக்கு என் நாக்கு

என் தாய் பாடித் தூங்கவைத்த தாலாட்டு

தினமுனக்காய் நான் படிப்பேன் என் குரலில்.

பாசத்தில் என் பெற்றோர் செய்த தவறெல்லாம்

தவறாமல் நான் செய்வேன் உன்னிடம்

கோபத்தில் ச்சீ என நீ வெறுக்க

உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்

என் அப்பனைப் போல்.

அன்று சாய்வு நாற்காலியில் வரப்போகும்

கவிதைகளை இன்றே எழுதிவிட்டால்

உன்னுடன் பேசலாம்

எழுதிவிட்டேன் வா பேச!

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.