இந்தியா பிரதான செய்திகள்

6 பெண்களுக்கு ‘புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்’

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 6 பெண்களுக்கு ‘புதிய தலைமுறையின் சக்தி விருதுகள்’ நேற்று வழங்கப்பட்டுள்ளன. தி இந்து’குழுமத்தின் இணை தலைவர் மாலினி பார்த்தசாரதி, டாக்டர் கமலா செல்வராஜ், பாடகி வாணி ஜெயராம், இந்திய கிரிக்கெட் வீராங்கனை காமினி உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தபெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்களை கௌரவிக்கும் வகையில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் இந்த ‘புதிய தலைமுறை சக்தி விருதுகள்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை ஆகிய 6 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. புலமைக்கான விருது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் துணிவுக்கான விருது உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலையில் காதலனை இழந்த கவுசல்யா சங்கருக்கும் திறமைக்கான விருது இந்திய கிரிக்கெட் வீராங்கனை காமினிக்கும் கருணைக்கான விருது சமூக சேவகி பாகீரதி ராமமூர்த்திக்கும் சாதனைக்கான விருது டாக்டர் கமலா செல்வராஜுக்கும் வழங்கப்பட்டன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.