குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு துணுக்காய் அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தின் அம்பலவன்சின்னக்கட்டுக்குளம் முற்றாக வற்றியதன் காரணமாக 93 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கிணறுகளின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன் இக்குளத்தினை நம்பி மேற்கொள்ளப்பட்டிருந்த மேட்டுப் பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளதுடன் தென்னை, மா, பலா போன்ற மரங்களும் நீரின்றி வாடி வருவதாக இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தின் மேட்டுக் காணியில் குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான நீர்த் தேவையினைத் தீர்மானிக்கின்ற குளமாக அம்பலவன்சின்னக்கட்டுக்குளம் காணப்படும் நிலையில் இக்குளத்தின் நீர் வற்றியதன் காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகளும் குடிநீருக்கு அலைந்து திரிகின்ற நிலைமை காணப்படுகின்றது.
Spread the love
Add Comment