சினிமா பிரதான செய்திகள்

ராஜமௌலியின் படத்தில் சமந்தா

பாகுபலி 2 படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில், ராக்ஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்பொழுது சமந்தாவும் இன்னொரு நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூனியர் என்டிஆருக்கா அல்லது ராம்சரணுக்கா சமந்தா ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்தப் படத்திற்கு பின்னர்தான் தெலுங்கில் சமந்தாவின் மவுசு கூடியது எனலாம்.

நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்னர் அதிகமான படங்களில் நடித்து வருகின்ற நிலையில் இந்த மாத இறுதியில், அவர் தமிழில் நடித்திருக்கும் இரும்புத்திரை மற்றும் தெலுங்கில் நடித்துள்ள ரங்கஸ்தலம், மகாநதி ஆகிய படங்களும் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers