Home இந்தியா பட்டியல் படத்தை தயாரித்த விஷ்ணுவர்தனின் தந்தை சேகர் காலமானார்

பட்டியல் படத்தை தயாரித்த விஷ்ணுவர்தனின் தந்தை சேகர் காலமானார்

by admin

இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தையும், தயாரிப்பாளருமான ‘பட்டியல்’ சேகர் என அழைக்கப்படும் தயாரிப்பாளர் சேகர் உடல்நலக் குறைவால் தன்னுடைய 63ஆவது வயதில் சென்னையில் இன்று காலமானார்.

இவர் பரத், ஆர்யா, பூஜா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான  ‘பட்டியல்’ படத்தைத் தயாரித்தவர். இயக்குனர் விஷ்ணுவர்தன். நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையான சேகர் ‘பட்டியல்’ படத்துடன் ‘கழுகு’ மற்றும் ‘அலிபாபா’ படங்களையும் தயாரித்துள்ளார்.

இதேவேளை ‘ராஜ தந்திரம்’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ‘பட்டியல்’ சேகர், கடந்த ஒரு வார காலமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.

பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More