இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் – கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படம் கவனத்தை ஈர்க்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மைய காலத்தில் கவனத்தை ஈர்க்கும் படங்களை தந்த பா. ரஞ்சித் இந்தப் படத்தை தயாரிக்கின்றார்.
இந்தப் படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிடுகையில் “இது முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்ட படம். ‘பரியேறும் பெருமாள்’ என்பது குலதெய்வம் பெயர். தென்தமிழக கிராமங்கள், நகரங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் பிரிவினை படிநிலை உள்ளது. அது உருவாக்கும் பெரும் தாக்கத்தை உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ இருக்கும்” என்றார்.

Add Comment