Home இலங்கை கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு – இருவர் காயம்

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு – இருவர் காயம்

by admin

 

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தைப் பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More