உலகம் பிரதான செய்திகள்

பப்புவா நியூ கினியா தீவில 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்


பப்புவா நியூ கினியா தீவில் இன்று 7.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியமையில் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில தஞ்சமடைந்தனர்.  எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 26-ம் திகதி பப்புவா நியூ கினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers