குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்ட இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவினை பிறப்பிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குற்றமிழைப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு விடயங்களை கையாள்வதில் சில குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவினர் சம்பவங்கள் குறித்து முன்கூட்டியே அறிவிக்காமை தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென கோரியுள்ளார். புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்து சில பிரச்சினைகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment