Home இலங்கை ​சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் – மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்த முயற்சி…

​சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் – மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்த முயற்சி…

by admin

​சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு முறைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தியதன் மூலம் நாட்டில் இனங்களுக்கிடையிலான மோதலை கட்டுப்படுத்த முடிந்ததாக இந்த சந்திப்பின் போது காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அண்மையில் கண்டியில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையின் போது குழப்பங்களை தோற்றுவிக்கும் வகையிலான போலிப் பிரசாரங்களை தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More