முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை வடக்கில் கடையடைப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி இவ்வாறு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பெரும்பாலான தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் அதிக அளவில் மூடப்பட்டுள்ளன.
மன்னாரில் உள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அரச, தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போல் இடம்பெற்று வருவதோடு, பாடசாலைகள் மற்றும் அரச தனியார் திணைக்களங்களின் செயற்பாடுகளும் வழமை போல் இடம்பெற்று வருகின்றன.
Spread the love
Add Comment