குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு செய்ததன் பின்னர் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலான தீர்மானம் மீளாய்வின் பின்னர் எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசத்தில் இயல்பு நிலைமை திரும்பிக் கொண்டிருப்பதாகவும், அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 11 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க்பபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment