Home இந்தியா 4 ல் குழந்தை நட்சத்திரம்- 13ல் கதாநாயகி- 33ல் திருமதி கபூர்- 50 ஆண்டுகள் சுப்பர் ஸ்ரார் – ஆவணமாகிறார் ஸ்ரீதேவி..

4 ல் குழந்தை நட்சத்திரம்- 13ல் கதாநாயகி- 33ல் திருமதி கபூர்- 50 ஆண்டுகள் சுப்பர் ஸ்ரார் – ஆவணமாகிறார் ஸ்ரீதேவி..

by admin

ஸ்ரீதேவி பற்றி தெரியாத பல விஷயங்களை ஆவணப்படம் மூலம் வெளிக்கொண்டு வர ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீதேவி 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 13 வயதில் கதாநாயகியாகி 50 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து ரசிகர்களின் சுப்பர் ஸ்ராராக திகழ்ந்தார்.

அவரைப்பற்றி தெரியாத பல விஷயங்களை ஆவணப்படம் மூலம் வெளிக்கொண்டு வர போனிகபூர் முடிவு செய்துள்ளார். ஸ்ரீதேவியின் திடீர் மரணம் தொடர்பில் துயரில் இருக்கும் அவருக்கு ஸ்ரீதேவி யின் மரணத்தில் மர்மம் இருப்பதாக வெளியாகும் தகவல்களும் மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில்தான் ஸ்ரீதேவி பற்றிய ஆவணப்படத்தை எடுத்து அவருக்கும் தனக்கும் இருந்த காதல், குடும்ப வாழ்க்கை, சினிமா என்று அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்தப்போகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் ஸ்ரீதேவிக்கு எவ்வாறு மரணம் நேரிட்டது? குளியல் அறையில் நடந்தது என்ன போன்ற விவரங்களையும் இந்த ஆவணப்படத்தில் கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீதேவியுடன்  நடித்த நடிகர்கள், அவரை வைத்து படங்கள் இயக்கிய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆகியோரும் ஆவணப்படத்தில் தோன்றி ஸ்ரீதேவியுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி இந்தியில் நடித்து அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய மிஸ்டர் இந்தியா படத்தை இயக்கிய சேகர்கபூர் இந்த ஆவணப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More