இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

முஹமட் சாமி மீது அவரது மனைவி கொலை முயற்சி குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சாமி மீது அவரது மனைவி கொலை முயற்சி குற்றச்சாட்டு சமத்தியுள்ளார். சாமியும் அவரது குடும்பத்தினரும் தம்மை கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என சாமியின் மனைவி ஹாசீன் ஜஹான், காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

அதிகளவான தூக்க மாத்திரைகளை வழங்கி தம்மை கொலை செய்ய சாமி குடும்பத்தினர் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் சாமியின் சகோதரர் தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சாமி குடும்பத்தினர் தம்மை கொலை செய்ய முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாமியின் மனைவி ஹாசீன் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சாமி மற்றும அவரது குடும்பத்தினர் மீது சுமத்தி, கொல்கொத்தாவின் காவல் நிலையமொன்றில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers