Home உலகம் அமெரிக்க ரூஸ்வெல்ட் தீவில், உலங்கு வானூர்தி ஆற்றில் விழுந்தது – இருவர் பலி…

அமெரிக்க ரூஸ்வெல்ட் தீவில், உலங்கு வானூர்தி ஆற்றில் விழுந்தது – இருவர் பலி…

by admin

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்த விபத்தில் 2 பேர் பலி

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் அருகே உள்ள ரூஸ்வெல்ட் தீவில்    புகைப்படங்கள் எடுக்க படப்பிடிப்பாளர்கள், ஒரு உலங்கு வானூர்தியை  வாடகைக்கு எடுத்து அங்கு சென்று கொண்டிருந்தனர். உலங்கு வானூர்தியில் 6 பேர் பயணம் செய்தனர்.

ரூஸ்வெல்ட் தீவு அருகே சென்றபோது உலங்கு வானூர்தியில்  திடீர் கோளாறு ஏற்பட்டு நியூயார்க் அருகே ஓடும் கிழக்கு ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மீட்பு பணியில் நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். அவர்கள் உலங்கு வானூர்தியுடன் ஆற்றில் மூழ்கிய 3 பேரை உயிருடன் மீட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விமானி மட்டும் நீந்தி கரை ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More