Home சினிமா முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்!

முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய காஜல் அகர்வால்!

by admin


தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் பல பிரபல நாயகர்களுடன் இணைந்து நடித்தவர். இவர் தெலுங்கு திரையுலக முன்னணி டிகர் ஒருவரின் படத்தில் இருந்து விலகியிருப்பது திரையுலகில் பேசப்படும் ஒரு விவகாரமாகிவிட்டது.

காஜல் அகர்வால் நடிக்கின்ற திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றிபெற்று வருகின்ற நிலையில் தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார். சமீபத்தில், தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் ‘அமர் அக்பர்’ படத்தில் அவருடைய நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அத்துடன் தனது சம்பளத்தையும் உயர்த்தியிருந்தார்.

முதலில் அமர் அக்பர்  படத்தில்  நடிக்க ஒப்புக்கொண்ட காஜல், பின்னர் தான் பேசியபடி சம்பளம் வழங்கவில்லை என்று கூறி அந்தத் திரைப்படத்தில் இருந்து விலகி உள்ளார். தற்போது, அந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக அனுஇமானுவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் சம்பளத்தை விட்டுக் கொடுக்கலாம். ஆனால் இது போன்ற மசாலா படங்களுக்கு சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று படக்குழுவினருக்கு நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More