இலங்கை பிரதான செய்திகள்

யாழில் இரு இனங்களுக்கு இடையில் முறுகல். – காவற்துறை பாதுகாப்பு பணியில்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

யாழ்.பொம்மைவெளி பகுதியில் உள்ள பள்ளிவாசல் முன்பாக நேற்றிரவு முஸ்லீம் – தமிழ் இளைஞர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் தெரியவருவதாவது ,

குறித்த பள்ளி வாசல் முன்பாக வர்த்தக நிலையம் ஒன்றினை நடாத்தி வரும் தமிழ் இளைஞர் ஒருவர் தனது முச்சக்கர வண்டியினை பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வந்துள்ளார்.

அந்நிலையில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற முஸ்லீம் இளைஞர்கள் இனி பள்ளிவாசலுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்த கூடாது என எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. அவ்வேளை அங்கு நின்ற ஏனையவர்கள் இரு தரப்பினர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் இரவு வேளை கடையில் நின்றிருந்த தமிழ் இளைஞர்களுக்கும் முஸ்லீம் இளைஞர்களுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அது தொடர்பில் யாழ்.காவல் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • I am sorry over this in gesture. In fact that particular minority community will cornered another minority as well. In view of wage towards annihilation. In fact that those ill fated under murky area folks invention. In fact due to latest Sri Lankan Naval commanders speech as well would lead to those their own language speaking folks would endanger them. There in this gesture those religious dignitaries who ever in hindu, muslim, christian dignitaries embark in this gesture by having the joint meeting with the presence of state officials. Make such conciliation by calm in this volatile situation. Though inform those youth such strict instruction in this gesture. Other wise even those Jaffna folks involve in knfing culture involve in this by making robing and make money out of it. By reinventing the resurgence in our land again. May God bless mother Sri Lanka.