உலகம் பிரதான செய்திகள்

பிரபல விஞ்ஞானி ஸ்டீவன் ஹோப்கின்ஸ் காலமானார்..

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீவன் ஹோப்கின்ஸ் காலமானார். 76 வயதில் அன்னார் இந்த உலகை விட்டு பிரிந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பின்னர் உருவான மிக முக்கியமான பௌதீகவியல் விஞ்ஞானியாக ஹோப்கின்ஸ் கருதப்படுகின்றார்.

1963ம் ஆண்டில் தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. இதனால், அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார். விசித்திரமான மோட்டோ நியூரோன் என்னும் நோயினால் ஹோப்கின்ஸ் பாதிக்கப்பட்டிருந்தார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறியிருந்த போதிலும், அதனை பொருட்படுத்தாது கல்வியைத் தொடர்ந்து இந்த உலகிற்கு அளப்பரிய சேவையை ஹோப்கின்ஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர். `ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்

“எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 “ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்” என அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம், தெரிவித்துள்ளனர்

அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.