இலங்கை பிரதான செய்திகள்

உடைக்கப்பட்ட பாடசாலை மதில் விமானப்படையினரால் மீள் நிர்மாணம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் மைதான காணியில் அமைக்கப்பட்ட சுற்று மதில் நேற்று முன்தினம்(12) இரவு இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் விமானப்படையினரால் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சென்றிருந்த போது கனகபுரம் பாடசாலை சமூகத்தினரால் பாடசாலை மைதானத்திற்குரிய காணிக்கு சுற்று மதில்அமைத்து தருமாறு கோரி கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆயிரத்து 600 அடி நீளமான மதில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட நிதி ஓதுக்கீட்டின் கீழ் நாற்பது இலட்சம் ரூபா செலவில் விமானப்படையினரால் அமைக்கப்பட்ருந்தது. குறித்த மதில் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாடசாலை சமூகத்தினரால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மதில் இன்று காலை முதல் விமானப்படையினரால் மீண்டும் மீள்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.