Home இலங்கை சிறைச்சாலைக்குள் ஹோரோயின் கடத்தின பெண்ணுக்கு விளக்கமறியல்

சிறைச்சாலைக்குள் ஹோரோயின் கடத்தின பெண்ணுக்கு விளக்கமறியல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைத்துள்ள சிறைக்கைதிகளுக்கு பற்பசைக்குள் ஹோரோயின் போதை பொருளை கடத்திய பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவரை பார்வையிட நேற்று செவ்வாய்க்கிழமை சென்றுள்ள நிலையில் அவர் கொண்டு சென்ற பொதியை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிட்டனர்.

பொதியில் இருந்த பற்பசையைச் சோதனையிட்ட போது, அதற்குள் 4 பக்கற்றுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன எனவும் அவற்றுக்குள் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளமையை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கண்டறிந்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து சிறைசாலைக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர், இளம் பெண்ணையும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.

அதனை அடுத்து சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் காவல்துறையினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை அடுத்து அவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More