குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்லோவேனியாவில் ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகளவு சம்பளங்களை வழங்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சுமார் 40000 ஆசிரியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், 15000 ஆசிரியர்கள் வீதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
ஸ்லோவேனியாவின் 11 நகரங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பெரிய இதயத்தைக் கொண்ட ஆசிரியர்களுக்கு சிறிய சம்பளம் என்ற பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர்களின் பணி உதாசீனம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment