உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அநாகரீகமாக எச்சில் உமிழ்ந்த காரணத்தினால் பதவியிழந்த ஒளிபரப்பாளர்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

அநாகரீகமாக எச்சில் உமிழ்ந்த காரணத்தினால் விளையாட்டு ஒளிபரப்பாளர் ஒருவர் தனது பதவியை இழந்துள்ளார். இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சேவையான ஸ்கை தொலைக்காட்சி சேவையில் கடயைமாற்றி வரும் ஜெமி கரஹரே இவ்வாறு பதவியை இழந்துள்ளார்.

கரஹர், லிவர்பூல் கழகத்தின் சார்பிலும் இங்கிலாந்து தேசிய அணியின் சார்பிலும் விளையாடியுள்ளார்.  சிறுமி மற்றும் அவரது தந்தை மீது கரஹர் எச்சில் உமிழ்ந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு வாகனத்தில் பயணித்த இருவரின் மீதும் அநாகரீகமான முறையில் எச்சில் உமிழும் காட்சிகள் காணொளியாக பதியப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பருவகாலம் முழுவதும் கரஹர், ஸ்கை தொலைக்காட்சியின் விளையாட்டு விமர்சன நிகழ்ச்சிகளிலோ வர்ணணைகளிலோ பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரஹரின் பணி தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமது செயலுக்காக வருந்துவதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் கரஹர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.