நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் மேசன் கிரேன்(Mason Crane ) விலகியுள்ளார். இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 22ம் திகதி முதல் ஒக்லாந்தில் தொடங்குகிறது.
இதற்கு முன்னோட்டமாக இரண்டு நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளநிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேசன் கிரேன் இடம்பிடித்திருந்தார். எனினும் கிரேனுக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இடது கை சுழல் பந்து வீச்சாளரான ஜேக் லீச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Spread the love
Add Comment