இலங்கை பிரதான செய்திகள்

புத்தக பை தடக்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சுழிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் ஹரிகரன் (வயது 09) எனும் மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த மாணவன் நேற்று பாடசாலைக்கு சென்ற போது புத்தக பை தடக்கி கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். அதனை அடுத்து பாடசாலை ஆசிரியர்கள் மாணவனை சிகிச்சைக்காக சங்கானை வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர்.

மாணவன் வைத்திய சாலைக்கு கொண்டு வரும் வழியிலையே உயிரிழந்து விட்டார் என சங்கானை வைத்திய அதிகாரி தெரிவித்தார். அதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாணவனின் சடலம் ஒப்படைக்க ப்பட்டு உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.