பிரதான செய்திகள் விளையாட்டு

பங்களாதேஸ் கிரிக்கெட் சபை வருத்தம்

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பங்களாதேஸ் கிரிக்கெட் சபை வருத்தம் வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கை அணியுடன் ஏற்பட்ட முறுகல் நிலைமை குறித்து இவ்வாறு வருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக பங்களாதேஸ் அணியின் வீரர்கள் நடந்து கொண்ட விதத்திற்காக இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளது.

போட்டியின் அழுத்தம் மற்றும் முக்கியத்துவம் காரணமாக வீரர்கள் கிரிக்கட் விளையாட்டின் கனவான்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளது. எனினும், இந்த செயற்பாட்டுக்காக பெரிதும் வருந்துவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட் சபை சிறந்த முறையில் சுதந்திர கிண்ண போட்டித் தொடரை ஏற்பாடு செய்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களிலும் இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.