இலங்கை பிரதான செய்திகள்

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் காவல்துறையினருக்கு தொடர்பு?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்களுடன் காவல்துறையினருக்கு தொடர்பு உண்டு என கொழும்பு வார இறுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கண்டி திகன மற்றும் தெல்தெனிய ஆகிய இடங்களில் இடம்பெற்றிருந்த வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் மஹாசோன் பலகாய என்னும் இயக்கமொன்று செயற்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்திருந்தது.

இந்த மஹாசோன் பலகாய என்னும் இயக்கத்தின் பொறுப்பாளர் என அடையாளப்படுத்தப்படும் அமித் வீரசிங்கவுடன், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் தொடர்பு பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவங்கள் இடம்பெற்ற காலப் பகுதியில் அமித் வீரசிங்கவுடன் புலனாய்வுப் பிரிவு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு பேணியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தொடர்பாடல்கள் குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்டி சம்பவம் காரணமாக மத்திய மாகாணத்தின் உயர் காவல்துறை அதிகாரிகள் சிலர் விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • Good transfer them to Jaffna Point pedro area jaffna. Where who ever Judge Illancheliya would tame them over there ha ha ha.. May God bless mother Sri Lanka.