இலங்கை பிரதான செய்திகள்

வாழைச்சேனை – கிரான், புலிபாய்ந்தகல் ஆற்றில் வவுனியா கணேசபுரம் சுதர்சினியின் சடலம்…

வாழைச்சேனை – கிரானில் இளம் பெண்ணின் ஒருவரின் சடலமொன்று இன்று (18.03.16) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கிரான், புலிபாய்ந்தகல் ஆற்றில் மீன்பிடிக்கத் தோணியில் சென்ற ஒருவர் பெண்ணொருவரின் சடலம் ஆற்றில் கரையொதுங்கி உள்ளதைக் கண்டு கிராம சேவகர் ஊடாக காவற்துறையினருக்கு தெரிவித்ததையடுத்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் வவுனியா கணேசபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய எஸ்.சுதர்சினி என் அவரது கடவுச் சீட்டின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர் சவூதி அரேபியா நாட்டில் பணிப்பெண்ணாக கடமை புரிந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

இவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த பிரயாண பை ஒன்றும், சமயலறை இலத்திரனியல் உபகரண பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட இரகசிய காவற்துறையினரும், வாழைச்சேனை காவற்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவும் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை காவற்துறைய நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார். தற்போது இந்த சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.