அழகுத்தமிழ் பேசும் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல்காந்தி எங்கு சென்றார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் இன்று (திங்கள் கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்த தமிழிசை சவுந்தரராஜன்,
“அழகுத்தமிழை பாஜக அழிக்க நினைக்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். அழகுத்தமிழ் பேசும் இலங்கை தமிழர்கள் அந்நாட்டில் கொல்லப்பட்டபோது ராகுல் காந்தி எங்கே சென்றார்?
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு துணைநின்றது அப்போது மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி. மொழிப்போர் தியாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தானே?
தமிழை வைத்து பிழைப்பு நடத்த ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ். ஒரு குடும்பத்தின் குரலாக காங்கிரசும் தேசத்தின் குரலாக பாஜகவும் உள்ளது” என தமிழிசை தெரிவித்தார்.
Spread the love
Add Comment