இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு, ஆமர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பு, ஆமர் வீதி மெசேன்ஜர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் பயணித்த கணவன், மனைவி ஆகிய இருவர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தெமடகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதான இனசமுத்து அன்டனி ராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள  ஆமர் வீதி காவல்துறையினர்; மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • Wow in fact while over in those area high police protection due to cricket match in near by armer street colombo. Even I observe so many police men over patrol over there. But this poor family got caught by the those gangster killing spree gun men. What a sad scenario. May God bless mother Sri Lanka.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers