அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதுருகிரிய கல்வருசாவ என்ற பிரதேசத்தில் இன்று பிற்பகல் குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்களில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாதாள உலகத் தலைவர்களில் ஒருவரான சமயன் என்பவரின் பிரதான சகாவான 44 வயதுடைய நிமல் சிறி பெரேரா என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment