இந்தியா பிரதான செய்திகள்

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்


நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார். நடராஜனுக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொருத்தப்பட்டன.

இந்த நிலையில் நடராஜனுக்கு சில தினங்களுக்கு முன்னர் நெஞ்சுவலியும் மூச்சு திணறலும் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக நேற்று நள்ளிரவு   மரணமடைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap