இலங்கை பிரதான செய்திகள்

தெமட்டகொடவில் ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் சேதம்


தெமட்டகொடவில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ விபத்தின் காரணமாக உயிராபத்துகள் எதுவும் பதியப்படாத போதும் 9 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தீப்பரவலுக்கான காரணங்கள் எவையும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரகளை தெமட்டகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.