உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியுடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரக அணிகள் போட்டியிட்டன.
நாயணச்சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது. இந்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 43 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
இதனை அடுத்து 178 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
Spread the love
Add Comment