இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதன் மூலமே எதிர்பார்த்த பொருளாதார இலக்கை அடைந்து கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.
தேசிய நிதி மூலோபாய வழியை உருவாக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றழய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை பெற்றுக் கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வேகம் திருப்திப்படும் வகையில் இல்லை என்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி நோக்கினால் நாம் விரும்பும் மட்டத்திற்கு முன்னேற்றம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Add Comment