சினிமா பிரதான செய்திகள்

‘பாவம் விஜய், அஜித்’- சித்தார்த் சர்ச்சை டுவிட்!



தமிழ் சினிமாவில் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து  நடிகர் சித்தார்த் வெளியிட்ட டுவிட்டர் நிலைத் தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த மாதம் 1ஆம் திகதி முதல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் படப்பிடிப்பு மற்றும்  தயாரிப்பு பணிகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனினும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு, சென்னையிலுள்ள விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்றது. இதனையடுத்து ‘விஜய் படத்துக்கு மட்டும் ஸ்பெஷலா?’ என்று சில தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

விஜய் படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்கவில்லை. சமுத்திரக்கனி இயக்கிவரும் ‘நாடோடிகள் 2’ உள்பட இன்னும் சில படங்களுக்கும் சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது’ என தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் நேற்று விளக்கமளித்தார்.

இதனையடுத்து சில நடிகர்கள் தமது ஆதங்கங்களை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் குறித்து நடிகர் சித்தார் வெளியிட்ட டுவிட்டர் இதோ,

“இன்றைய மிருகத்தனமான சினிமா மார்க்கெட்டில், எல்லாப் படங்களுமே மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகின்றன. ஒரு படத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுக்காமல், எல்லாப் படங்களுக்கும் அனுமதி கொடுங்கள். நாம் எல்லாருமே சமம். அந்த ஒற்றுமை குலைந்தால் கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு இதுவரை சினிமா மீது அக்கறை கொள்ளவில்லை, இனிமேலும் கொள்ளப் போவதில்லை. நூற்றாண்டு காலமாக இப்படித்தான் நடந்து வருகிறது. அவர்கள் சினிமா மீது அக்கறை கொண்டு மாற்றம் செய்வது என்பது அதிசயமாக நடந்தால் தான் உண்டு. சினிமாத்துறையின் ஒற்றுமையை முதலில் காட்டுவோம். மாற்றம் தானாக வரும். இழிந்த மொழி, தேவையில்லாத விஷம், சம்பந்தமில்லாத கோபம். இரண்டு குழுக்களில் இருக்கும் வேலையில்லாத சில முட்டாள்கள், அனைவரின் பெயரையும் நேரத்தையும் வீணாக்குகிறார்கள். பாவம் விஜய் – அஜித்” என்று நடிகர் சித்தார் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap