Home உலகம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி

by admin


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்றில் ஸ்கொட்லாந்துஅணியை விழ்த்தியதன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. நே;நையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனை அடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி48.4 ஓவரில் 198 ஓட்டங்களைப் பெற்றிருந்தது

இதனையடுத் 199 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி களமிறங்கியது. 35. 2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி மேற்கிந்தியத்தீவுகள் அணி 5 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உலக கோப்பைக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More