சினிமா பிரதான செய்திகள்

விஜய் சேதுபதி சிறப்பு தோற்றம்! தயாராகிறது சந்திரசேகர் நடிக்கும்‘டிராஃபிக் ராமசாமி

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராஃபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் விக்கி இயக்கிவரும் இந்தப் படத்தில், டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில்   விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளார். அத்துடன்  ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, சீமான், குஷ்பு, மனோபாலா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகர் விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் நடிக்கிறார். சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் நீண்ட காட்சிகளில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
யார் இந்த  டிராஃபிக் ராமசாமி? 

டிராபிக் ராமசாமி ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச் சேவகர். வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் இறங்கி போக்குவரத்தைச் சீர்படுத்தும் பழக்கத்தைக் கொண்டவர். இதனால்தான் இவர்  டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்படுகின்றார்.
ஆரம்பத்தில் ராமசாமி தானே முன்வந்து சென்னை, பாரி முனையின் முன்னால் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் உதவி செய்தார். அதனையடுத்து தமிழக காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் ”டிராஃபிக் ராமசாமி” என்று அழைக்கப்படுகிறார்.

டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே.

சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார்.
இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் இவர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers