உலகம் பிரதான செய்திகள்

தென் சீனக்கடல் – மேற்கு பசுபிக் பகுதியில் சீன விமானப்படையின் போர்ப்பயிற்சி….

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் மற்றும் மேற்கு பசுபிக் பகுதியில் சீன விமானப்படை போர்ப்பயிற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பசுபிக் பெருங்கடலின் ஒரு பகுதியான தென்சீனக்கடல் வழியாக உலகின் மூன்றில் இரு பங்கு கப்பல் போக்குவரத்து இடம்பெறுவதுடன் இந்த கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்வான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்ற போதும் சீனா, அங்கு சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தென் சீனக்கடல் மற்றும் மேற்கு பசுபிக் பகுதியில் சீன விமானப்படை போர்ப்பயிற்சியை நடத்தி உள்ளது. இந்த போர் பயிற்சி எப்போது நடைபெற்றது, குறிப்பாக எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றி எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers