குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் நடைபெறும் தேர்தல்களில் இந்தியாவின் செல்வாக்கு மறுக்கப்பட முடியாததொன்று என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா , பிராந்திய வலயத்தின் முக்கியமான ஓர் நாடாக திகழ்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் பல்வேறு விடயங்களில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பொதுத்தன்மை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் செல்வாக்கை முற்று முழுதாக நிராகரித்துவிட முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஸவின் தோல்வியை உறுதி செய்ய அமெரிக்காவும் இந்தியாவும் செயற்பட்டதாக பலர் இலங்கையில் நம்புகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு தமது தந்தையான மஹிந்த ராஜபக்ஸ முக்கியத்துவம் வழங்கினார் எனவும், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விடயங்களை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Add Comment