இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் அச்சத்தில்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சமீப காலமாக கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் ( 27-03-2018) இன்று அதிகாலை 2.00 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்

அப்பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை அழைத்து அவரை கத்திமுனையில் வைத்து கொள்ளையில் ஈடுபட்டபோது அயல் வீடுகளிருந்து சத்தங்கள் எழும்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிசெல்ல முயன்றுள்ளனர் அயலவர்கள் விரட்டிசென்று உந்துருலியை பிடித்தபோது அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களான வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் உந்துருலியையும் விட்டு தப்பிசென்றுள்ளார்கள்.

இது தொடர்பாக பண்னங்கண்டி மக்கள் காவல்துறையினருக்கு அறிவித்த போது பல மணிநேரம் கழித்தே! அவ் பகுதிக்கு காவல்துறையினர் வருகைதந்தமையால் கிராமமக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். சம்பவ இடத்துக்கு வருகைதந்த காவல்துறையினர் கொள்ளையர்கள் விட்டு சென்ற தடையப்பொருட்களை கொண்டு சென்றுள்ளார்கள். இது தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.