குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வியட்நாம் பாடகி மாய் கோய் கைது செய்யப்பட்டுள்ளார். மாய் கோய் பிரபல பாடகி என்பதுடன் மிக முக்கியமான ஓர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாய் கோயிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவரிடமிருந்து சீடிக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணம் செய்திருந்த போது மாய் கோய் அப்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமாவை சந்தித்திருந்தார். அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக மாய் கோய் காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment