சினிமா பிரதான செய்திகள்

விஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி


சீனு ராமசாமி தமிழ் திரையுலகில் வித்தியாசமான, வெற்றிப் படங்களை தந்தவர். தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கியவர். இவர் தனது படமொன்றில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ பட்டம் வழங்கியது போல், தற்போது உதயநிதிக்கு புதிய பட்டம் ஒன்றை வழங்கி உள்ளார்.

‘தர்மதுரை’ படத்தில்  கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்று பட்டம் வழங்கியதை ரசிகர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்டது., ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி என்று அனைவரும் அழைத்து வருகிறார்கள்.

தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ என்று பட்டம் வழங்கி இருக்கிறார். உதயநிதி  ஸ்டாலினை வைத்து ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் சீனுராமசாமி. இதில் தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

படம் முழுவதையும் பார்த்த சீனுராமசாமி, ‘கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில் என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத்தோன்றியது’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers