Home உலகம் தென் கொரிய இசைக் கலைஞர்களின் இசை மழையில் உருகிப் போன வடகொரிய ஜனாதிபதி

தென் கொரிய இசைக் கலைஞர்களின் இசை மழையில் உருகிப் போன வடகொரிய ஜனாதிபதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் கொரிய இசைக் கலைஞர்களினால் நடத்தப்பட்ட இசை நிகழ்;ச்சி வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை பெரிதும் கவர்ந்துள்ளது. கே-பொப் குரூப் என்னும் தென்கொரிய இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர். இசை நிகழ்ச்சிப் பரிமாற்றம் மிகவும் முக்கியமானது எனவும் இந்த சந்தர்ப்பம் ஐக்கிய நாடு என்பதனை உணர்த்துவதாகவும் ஜனாதிபதி கிம் தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது தென் கொரியாவிற்கு, வடகொரியா கலைஞர்களை அனுப்பி வைத்திருந்தது.
இந்த மாத இறுதி வாரத்தில் வடகொரிய தென் கொரிய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பல தசாப்தங்களின் பின்னர் தென் கொரிய இசைக்கலைஞர்கள் முதல் தடவையாக வடகொரியாவிற்கு பயணம் செய்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More