Home இலங்கை நேற்று – இழுபறி – இன்று இறுதி சமரச முயற்சி – நாளை வெற்றிபெறுவாரா பிரதமர்?

நேற்று – இழுபறி – இன்று இறுதி சமரச முயற்சி – நாளை வெற்றிபெறுவாரா பிரதமர்?

by admin

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கையில்லா பிரே­ரணை மீதான விவா­தமும் வாக்­கெ­டுப்பும் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இது தொடர்­பாக சமரசத்தை  ஏற்­ப­டுத்தி ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வ­தற்­கான இறுதிச் சந்­திப்­பொன்றை இன்று காலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நடத்­த­வி­ருக்­கிறார்.

அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு இன்று காலை ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­கா­ரத்தில் இரண்டு தரப்­பி­னரும் எவ்­வாறு சம­ர­ச­மான முறையில் இணக்­கப்­பாட்­டிற்கு வர முடியும் என்­பது குறித்து ஆரா­யப்­ப­ட­வி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் நேற்­று­மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட சந்­திப்­பி­லேயே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் இந்த கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்தார். முதலில் இந்த கலந்துரையாடலை  ஆரம்­பித்து வைத்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிற­சேன, பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் பல்­வேறு தரப்­பி­னரும் பல்­வேறு வித­மான நிலைப்­பா­டு­களில் இருப்­ப­தா­கவும் தற்­போது பிரே­ர­ணையின் வெற்றி தோல்வி நிலை­மை­யா­னது 50 க்கு 50 என்ற நிலை­மையில் காணப்படுவதாகவும்  தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்று ஐக்­கிய தேசியக் கட்சி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணயில் வெற்­றி­பெ­று­மானால் அது தென்­னி­லங்­கையில் இன­வா­தி­க­ளுக்கு தீணி போடு­வ­தாக அமையும் என்றும் ஜனா­தி­பதி இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார். இந்த சந்­தர்ப்­பத்தில் கருத்து வெ ளியிட்ட நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர, ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ் முஸ்லிம் மக்­களின் வாக்­குளை பெற்று நீங்கள் வெற்றி பெற்­றீர்கள். அப்­படி உங்களால்  வெற்றி பெற முடி­யு­மாயின் ஏன் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஏன் கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்று நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க முடி­யாது என்று கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இல்லை. இல்லை. நான் தமிழ் முஸ்லிம் மக்­களின் வாக்­குளை பெற்று வெற்­றி­யீட்­டி­யதை நினைத்து பெருமையடைகிறேன். இதனை நான் உலகம் முழு­வதும் கூறி வரு­கிறேன். ஆனால் தென்­னி­லங்­கையில் தற்­போது இருக்கும் நிலைமை குறித்தே நான் இந்த இடத்தில் தெ ளிவு­ப­டுத்­தினேன் என்று குறிப்­பிட்டார். இத­னை­ய­டுத்து கேள்வி எழுப்­பிய தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோகணேசன், நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­காரம் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு என்ன என்­பது குறித்தும் அக் கட்சி பிர­த­ம­ருக்கு ஆத­ர­வ­ளித்தால் ஒரு நெருக்­க­டியும் இல்­லை­தானே என்று கேட்­டி­ருக்­கிறார்.

இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இது குறித்து நான் தற்­போது சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­துவேன். (நேற்றிரவு குறித்த பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது) சுதந்­திரக் கட்­சி­யா­னது டிசம்பர் 31 ஆம் திக­தியே தேசிய அர­சாங்­கத்தை விட்டு வில தீர்­மா­னித்­தது. ஆனால் நான்தான் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வ­டையும் வரை அர­சாங்­கத்தில் நீடிக்­கு­மாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.

இதன்­போது இந்த விடயம் தொடர்பில் ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வ­தற்கு என்ன செய்­யலாம் என்று கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் கேட்டிருக்கின்றனர். இதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, நாளை காலை (இன்று காலை) சுதந்­திரக் கட்­சி­யி­ன­ரையும் ஐக்­கிய தேசிய முன்னணியினரையும்  சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தாக குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அதா­வது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் இறுதி சமரச முயற்சியாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான இந்த சந்திப்பை நடத்துவோம் என ஜனாதிபதி இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் இணக்கம் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை இந்த சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் முடியும் வரை எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்திருக்கிறார். தொடர்ந்து இன்று காலை சந்தித்து இறுதியாக ஆராய்வது என்ற தீர்மானத்துடன் கூட்டம் நிறைவடைந்திருக்கிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More